இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் முதல் பெண் காவல் ஜீப் ஓட்டுநர் நியமனம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 ஜூன், 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் முதல் பெண் காவல் ஜீப் ஓட்டுநர் நியமனம்.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் முதல் பெண் காவல் ஜீப் ஓட்டுநர் நியமனம்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் முதன் முறையாக பெண் ஒருவர் ஆயுதப்படையில் ஜீப் ஓட்டுநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் போலீசாரை டிரைவராக காவல் வாகனங்களுக்கு நியமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ்..ips உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ஜீப் இயக்குவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல் கட்டமாக ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்த பிரியதர்ஷினிக்கு ஜீப் இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது.அவர் ஆயுதப்படை பிரிவில் பெண் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ்,.முன்னால் அமர்ந்து பயணித்து வாகனம் ஓட்டிய பெண் போலீசை பாராட்டினார்.

மாவட்டத்தில் பெண் போலீசார் வாகனங்களில் டிரைவராக நியமிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு ஏற்ப ஆர்வமுள்ள பெண் போலீசாருக்கு 
வாகனங்கள் இயக்க பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad