திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை பகுதி 2, சங்கனேரி ஊரில் சேனார் குளம் வடக்கு பக்கம் வாஞ்சிநாதன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையின் அருகில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் காணப்பட்டது.
இன்று காலை சேனார் குளம் வடக்கு பக்கம் அமைத்துள்ள தனது கோழி பண்ணைக்கு செல்லும் வழியில் மேற்படி 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் வாஞ்சிநாதன் என்பவர் உடனே அருகில் உள்ள பழவூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழவூர் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் மேற்படி கொலைக்கான காரணத்தையும், கொலையாளிகளையும் கண்டுபிடிப்பதற்கு தனி படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக