குறிஞ்சிப்பாடி அருகே மீன்பிடி வலையில் சிக்கிய ஏழு அடி நீளம் கொண்ட பெண் முதலை
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி
வட்டத்தில், 12-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் பராந்தக சோழன் என்ற மன்னனால், பெருமாள் ஏரி உருவாக்கபட்டதாக
கூறபடுகிறது.
16 கிலோ மீட்டர் நீளமும்,1 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரி
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல குறிஞ்சிப்பாடி அடுத்த பெரியகண்ணாடி கிராமத்தை சார்ந்த சிவபாலன் என்ற இளைஞர் நேற்று முன்தினம் ஏரியில் மீன் பிடிப்பதற்க்காக மீன் வலையினை விரித்து வந்ததாகவும், மறுநாள் காலையில் மீன் பிடி வலையில் சிக்கியுள்ள மீன்களை சேகரிப்பதற்க்காக வலையினை இழுத்ததாக கூறபடுகிறது.
தனது வலையினை ஏரியில் இருந்து கரைக்கு இழுத்து வரும் போது பெரிய அளவில் ஏதோ ஒரு மீன் சிக்கி இருப்பதாக வேகவேகமாக இழுத்து வந்திருக்கிறார்.
அப்பொழுது தனது மீன்பிடி வலையில் சிக்கி இருப்பது முதலை என கண்டதும் வேகவேகமாக சிவபாலன் பதட்டத்துடன் கரையினை நோக்கி ஓடிவந்துள்ளார்.
அதன் பிறகு கடலூர் மாவட்ட வனசரகர்களிடம் தகவல்கள் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து வனசகர்கள் முன்னிலையில் சுமார் ஏழு அடி நீளமும், 100 கிலோ எடைக்கொண்ட பெண் முதலையினை இறந்த நிலையில் மீட்டுள்ளனர் முதல் முறையாக பெருமாள் ஏரியில் பெண் முதலையினை மீட்டுள்ளது குறிஞ்சிப்பாடி பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக