தாராபுரத்தில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் சொகுசு காரும் மோதி விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியீடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 ஜூன், 2025

தாராபுரத்தில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் சொகுசு காரும் மோதி விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியீடு



திருப்பூர் மாவட்டம்: தாராபுரம் புறவழிச் சாலை உடுமலை சிக்னல் அருகே ஆம்புலன்ஸ் வாகனமும் சொகுசு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியுடன் தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது.


இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த செல்வகுமார் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.


அப்பொழுது தாராபுரம் புறவழிச்சாலை உடுமலை சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தபோது. பல்லடத்தில் இருந்து சொகுசு கார் ஒன்று கிரீன் சிக்னல் போடப்பட்டதை அடுத்து வாகனத்தை இயக்கினார். அதே நேரத்தில் அப்பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் ஆம்புலன்ஸ் வாகனம் வருகிறது வழி விடுங்கள் என மைக் மூலம் தெரிவித்துக் கொண்டு இருந்தார்.


அப்போது அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ்காரின் (ரைட் சைடு) ஓட்டுநர் ஓட்டுமிடத்தில் அதி பயங்கரமாக மோதியது. இதில் ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி அழைத்து வந்த செல்வகுமார் உடன் தலைகீழாக கவிழ்ந்தது.


ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்த சந்திராபுரம் பூபதி வயது 20 அவரும் தலைகீழாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் விழுந்து கிடந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்து ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் பூபதி மற்றும் கீழே விழுந்து காயம் அடைந்து வந்த செல்வகுமார். ஆகியோரை மீட்டெடுத்தனர். சொகுசு காரை ஓட்டி வந்த பல்லடம் சுல்தான் பேட்டையை சேர்ந்த லட்சுமணன் வயது 31.


ஆகிய மூன்று பேர்களையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அழைத்துச் சென்றனர்.


அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மூன்று பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே இருந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad