நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியல் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா விடுதலை சிறுத்தை சார்பில் ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஜூன் 23 -
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காத தமிழக அரசை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து. மா பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் கலந்துகொண்டு கோஷம் எழுபபி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக