"நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்" (NiCEA). அமைப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

"நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்" (NiCEA). அமைப்பு

 


நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்குவதில் உள்ள தாமதத்தை கலைய 2023 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட  ஆறு தாலுகாக்களில் உள்ள  ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட கட்டிட பொறியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட அமைப்பு "நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்" (NiCEA).


ஐந்தாயிரம் ரூபாய் வருடாந்திர  சந்தாவுடன் முறையான சட்ட திட்டங்கள் மற்றும் முறையான பதிவேடுகளோடு துவங்கப்பட்ட இந்த அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக 5 போராட்டங்களும் மேற்பட்ட மாதாந்திர கூட்டங்களும் நடத்தி கட்டிட அனுமதி தாமதத்தில் உள்ள சிக்கல்களை  இயன்றவரை போராடி சிறிய அளவில் வெற்றியும் கண்டுள்ள சிறந்த அமைப்பாக காணப்படுகிறது. 


நீலகிரி மாவட்டத்தில் இவ்வாறு முறையாக பதிவு செய்யப்பட்டு வருடாந்திர சந்தா தொகையை கட்டி என்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு செயல்படும் அமைப்பு வெகு குறைவே ஆகும். அத்தகைய சிறப்புடன் செயல்பட்டு வரும் அமைப்பின் இரண்டாவது பதவியேற்பு விழாவை 15 ஜூன் 2025 ஆம் தேதி உதகை பெர்ன்ஹில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் ரிசாட்டில் வெகு சிறப்பாக 28 செயற்குழு நிர்வாகிகள் மற்றும் 75க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பதவி ஏற்புடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பொறியாளர் விஜய்பானு அவர்களின் தலைமையில் மூத்த பொறியாளர்கள் Dr.எல் எஸ் ஜெயகோபாலன் மற்றும் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியின் இயக்குனர் பொறியாளர் Dr.அருமைராஜ் அவர்களின் வரவேற்புடன் மண்டல தலைவர் பொறியாளர் ஸ்டாலின் பாரதி மற்றும் ஏனைய மண்டலம் ஏழின் இயக்க கலை தலைவர்கள் துணைத் தலைவர் டி எஸ் பிரபு செயலாளர் பி பாஸ்கர் என அனைவரது முன்னிலையில் நீலகிரி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் தலைவராக பொறியாளர் கிறிஸ்டோபர் திலக்குமார், பொதுச் செயலாளராக பொறியாளர் விஜயகாந்த் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவராக பொறியாளர் சம்பத், பொருளாளராக பொறியாளர் ஹரிஹரன், துணைத் செயலாளர்களாக பொறியாளர்கள் பரமேஷ் பெல்லன், பிரசாந்த் மற்றும் டானியல் கிறிஸ்டோபர், விளையாட்டு செயலாளராக பொறியாளர் முருகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, கட்டிட அனுமதி குழு இயக்குனராக பொறியாளர் கலைவாணி, சட்டக் குழு இயக்குனராக பொறியாளர் விஜய் சங்கர், சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் தினேஷ்குமார், துணை இயக்குனர்களாக பொறியாளர்கள் நரசிம்மன், கோவிந்தராஜன், மதுமிதா, ரஷ்மா நிக்காத், பிராங்கிளின் மார்ஷல், ஆறுமுகம், தினேஷ்குமார், ஜூஸ் வர்கீஸ், கே வி அணிலன், அரவிந்த் ஜெயநாதன், மண்டல செயலாளர்களாக பொறியாளர்கள் சேகரன், கார்த்திக், சந்தோஷ், சுகுமார் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பதவியேற்றனர். 


விழாவில் சவுத் இந்தியன் ஹார்டுவேர்ஸ் அண்ட் டூல்ஸ், கோல்டன் டச், ரெணக்கான், அக்னி ஸ்டில்ஸ், நாவல் டக்கர், பியூட்டி வேர்ஸ், ராம்கோ சிமெண்ட், நிப்பான் பெயிண்ட்ஸ், நானோ செராமிக்ஸ் மற்றும் மார்வெல் கலெக்ஷன்ஸ் என 11 ஸ்பான்சர்கள் பங்கு பெற்றதுடன் 200க்கும் மேற்பட்ட கட்டிடம் மற்றும் பொறியாளர் அமைப்பினர் கலந்து கொண்டு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. 


அதில் பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர் மற்றும் செயலாளர் கூறியதாவது கட்டிட அனுமதிக்க வேண்டி நீண்ட காலம் பல்வேறு போராட்டங்களும் நடத்தி பலவிதமான முயற்சிகளும் எடுத்து அரசாங்கத்தின் கவன ஈர்ப்பை பெற்றும் இந்நாள் வரை முழுமையாக கட்டிட அனுமதி காலதாமதம் இன்றி கிடைக்க ஆவணம் செய்யாமல் உள்ள மாவட்ட நிர்வாகத்தை புறக்கணித்துவிட்டு சட்டத்துக்கு உட்பட்டு கட்டிட வரைபடங்களை வரைந்து அனைத்து துறைகளிலிருந்து தடையில்லா சான்றை பெற்றவுடன் கட்டிட அனுமதி குழுவின் கூட்டத்திற்காக காத்திருப்பதை விட்டுவிட்டு நீதிமன்ற அபிடவிட் ஒன்றை பதிவு செய்துவிட்டு கட்டிடங்களை சட்டத்துக்கு உட்பட்டு கட்டும் பணியில் ஈடுபடும் முயற்சியை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கூறினார். 


மேலும் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் சைவ அசைவ உணவை சிறப்பாக ஏற்பாடு  செய்திருந்தனர்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad