திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, ஊரல்வாய்மொழியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் செயலாளர் முகமதுபயாஸ் தலைமை ஏற்றார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கற்பகம் உரையாற்றினார்.
60 கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். செங்கொடிகளோடு லோடு ஆட்டோவில் மைக்செட் கட்டி பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தில் தாலுகாகுழு உறுப்பினர்கள் 7 பேர்கள் கிளைச்செயலாளர்கள் 5பேர்கள் மற்றும் வி ச மாதர் வாலிபர் தமுஎகச தோழர்கள் ஆதரவாளர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கட்சியின் மாநில க்குழு உறுப்பினர் தோழர்.கற்பகம் காலை முதல் இரவு வரையிலும் பிரச்சாரஇயக்கத்தில் முழுமையாக கலந்து வழிகாட்டினார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. உள்ளூர் கோரிக்கை விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. மாவட்டமைய நோட்டீஸீம் விநியோகம் செய்யப்பட்டது. காலை முதல் இரவு வரையிலும் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் மதவெறி பாஜகவை முறியடிக்க மக்களுக்கு அம்பலபடுத்த வேண்டும் என்ற கட்சியின் முடிவை முழுமையாக அமுல்படுத்த ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், ஒருநாள் உழைப்பை தியாகம் செய்து பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்ட பல தோழர்களை பாராட்டினார்.
இந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கமானது காவல்கிணறு, வடக்கன்குளம், கோலியான்குளம், ஊரல்வாய்மொழி, இருக்கன்துறை, வண்ணார்குளம், பொன்னார்குளம் , சங்கனேரி நக்கநேரி, மகேந்திரபுரம், ராதாபுரம் உள்பட 17மையங்களில் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது ஊர்பொதுமக்களுக்கு குளிர்பானம், தேனீர் வழங்கினார்கள். கடைமடை விவசாயிகளும் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக