1 ம1/2சென்ட் வீட்டுனைக்காக இரண்டு அத்தைகள் மற்றும் அத்தை மகனை தாக்கிய மாமன் மகன்கள்!
திருப்பத்தூர், ஜூலை 25 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி தாதாக்குள்ளனூர் பகுதியை சேர்ந்த சின்னம்மாள் தம்பதி யருக்கு ராமச்சந்திரன் என்ற மகனும், கோவிந்தம்மாள், மணியம்மாள் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் 11/2 சென்ட் அளவிலான வீட்டுமனை உள்ளது.இந்த நிலையில் கோவிந்தம்மாள் திருமணம் முடிந்து சென்ற நிலையில அண்ணன் ராஜேந்தி ரனுக்கு திருமணம் முடிந்தது இந்த நிலை யில் மணியம்மாவுக்கு திருமணம் நடக்கா ததால் 11/2 சென்ட் அளவிலான வீட்டு மனை இடத்தை மணியம்மாள் பேரில் தாய் சின்னம்மாள் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். மேலும் பத்திரபதிவு செய்த நிலையில் கிராம நிர்வாக அலுவ லகத்தில் அரசு பதிவேடுமாற்றப்பட வில்லை இதனை அறிந்து கொண்டு மணியம்மாளின் அண்ணன் பிள்ளைக ளான ஜவகர் ,பானுமதி,சுபாஷ் ஆகிய மூன்று பேரும் மணியம்மாள் இடம் சென்று இடத்தை விட்டு வெளியே போக வேண்டும் என கூறி ஆபாச வார்த்தைக ளால் திட்டி மணியம்மாள் மற்றும் அவரு டைய அக்கா கோவிந்தம்மாள் கோவிந் தம்மாள் மகன் பிரபாகரன் ஆகிய மூன்று பேரையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் படுகாயம் அடைந்த மூவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இது குறித்து திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர். மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக