10 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற் கொலை- குடியாத்தம் போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

10 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற் கொலை- குடியாத்தம் போலீசார் விசாரணை!

10 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற் கொலை- குடியாத்தம் போலீசார் விசாரணை!
குடியாத்தம் , ஜுலை 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் கவரை  தெருவை சேர்ந்தவர் காரல் மார்க்ஸ் இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியா ளராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி அமலு இவர்களுக்கு  ஒரு மகளும் மகனும் உள்ளனர் மகன் மணி கண்டன் (வயது 16 )குடியாத்தம் பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் கடந்த சில நாட்களாக யாருடன் பேசாமல் வீட்டில் சோகமாக இருந்து வந்ததாக கூறப்படு கிறது இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனி அறையில்  மின் விசிறியில் மாணவன் மணிகண்டன் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார் சிறிது நேரத்தில் இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு சிகிச் சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்இதனையடுத்து உடல் உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad