இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் பேசியதாவது:-
இன்றையதினம் பள்ளியின் கூடுதல் கட்டடம் திறப்பு விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பள்ளியில் அதிகமான மாணவியர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து அவ்வபோது தலைமையாசிரியர் அவர்கள் நேரடியாக சந்திக்கின்ற பொழுது கூறுவார்கள். தலைமையாசிரியர் அவர்களுக்கு சென்ற ஆண்டு விருதுக்கு கிடைத்த ரூபாய் பத்து இலட்சத்துடன் இங்கு இருக்கின்ற பணியாளர்களை ஒன்றிணைத்து இந்த கட்டிடத்தை கட்டி முடித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அர்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதால், பள்ளியின் மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மேலும், மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். இவ்வாறு சிறந்த தலைமைத்துவம் வாய்ந்த தலைமையாசிரியர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கின்ற பள்ளியின் அனைத்து ஆசிரியர்களால் இந்த பள்ளி சிறந்து விளங்குகிறது.
மேலும், இந்த பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடம் தேவை என்று தலைமையாசிரியர் அவர்கள் கூறியிருந்தார்கள். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்படும். இங்குள்ள ஆசிரியர்கள் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு அவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான கல்வியை அளிப்பதில் பெரும் முயற்சியுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக கோவில்பட்டி பகுதியிலிருந்து வருகின்ற மாணவியர்கள் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் இருந்து வருகின்றவர்களாக உள்ளனர்.
எனவே, அனைத்து மாணவிகளும் உயர்கல்வி கற்று நல்ல நிலையை அடைய வேண்டும். மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக இடைநின்ற அனைத்த மாணவிகளையும் கண்டறிந்து, ஒரு மாணவியர் கூட விடுபடாமல் அனைவரும் கல்வி கற்று உயர்கல்வி செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். எந்தவொரு மாணவியர்களுக்கும் பணம் என்பதோ, நிதி என்பதோ தடையாக இருக்ககூடாது என்பதில் நாங்கள் அக்கறையடன் செயல்பட்டு வருகிறோம். எனவே, எந்தவிதமான கல்வி தேவையாக இருந்தால் என்னை அணுகலாம். இந்த பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு நபர்கள் உதவி செய்து வருகின்றனர்.
இந்த பள்ளி உயர்வதற்கான அனைத்து தேவைகளையும் சந்திக்க சமூகத்தின் அனைத்து பிரதிநிதிகளும், கொடையாளர்களும் முன் வரவேண்டும். மேலும், பல்வேறு திட்டங்களின் கீழ் கூடுதலாக இங்கு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து, ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர்.ச.கண்ணப்பன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து,கணேசமூர்த்தி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, நிறுவனர் இயற்கை வேளாண்மை (ஆயில் உழவுமுறை) பொன்னுச்சாமி பரஞ்ஜோதி, மாவட்டக்கல்வி அலுவலர்(பொறுப்பு), கோவில்பட்டி த.மரிய ஜான் பிரிட்டோ, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.ராஜலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மா.ரெங்கம்மாள், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக