உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 15.07.2025 அன்று முதல் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 15.07.2025 அன்று முதல் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல்.

உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 15.07.2025 அன்று முதல் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கக்கூடியது தான் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். 

அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த உன்னத திட்டத்தை நாளை (15.07.2025) தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைக்க உள்ளார். 

இத்திட்டத்தின் கீழ், நாளை (15.07.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள் பின்வருமாறு :-
உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு உரிய அலுவலர்களிடம் மனு அளித்து பயன்பெறலாம். 

மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். 

கலைஞர் மகளிர்உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad