திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது மாநாடு!
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் வட்டார அரசு தலைமை மருத்துவமனை அமைத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய 18வது மாநாடு ஜூலை 13 இன்று நடைபெற்றது. மாநாடு வெற்றி பெற வாழ்த்தி திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் பேசினார். நிகழ்வில் DYFI மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் பிரேம்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ரஞ்சித், ஒன்றிய தலைவர் சூர்யா, ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி, கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக