கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு
அருகே இந்து சமய அறநிலையத்துறை ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கமலவல்லித்தாயார் சமேத வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில் 60 வருடங்களுக்குப் பிறகு 97.90 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு. புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த பத்தாம் தேதி கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப் பட்ட புனித நீரை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயில் உச்சிக்கு கொண்டுசென்று கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கோயில் கருவறையில் உள்ள வேத நாராயணப் பெருமாளுக்கும் கும்பாபிஷேக நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் தருமபுர ஆதின27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் தில்லை திருச்சித்ர கூட ரங்காச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக