நெல்லை டவுனில் லிட்டில் பிளவர் பள்ளியில் இன்று மாலை காந்திமதி அம்பாள் பக்தர் பேரவை நிர்வாகிகள் காசி விஸ்வநாதன், சிதம்பரம் சீனிவாசன் , ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு குணசீலன்,பரமசிவன், லிட்டில் ஃப்ளவர் பள்ளி தாளாளர் மரிய சூசை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது- ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள்
திருக்கோவில் கிளை கமிட்டி மற்றும் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் கைங்கரிய டிரஸ்ட் சார்பில் ஆணி பெரும் திருவிழா திருதேரோட்டம் அன்று 4வது ஆண்டாக மகா அன்னதானம் நடைபெறுகிறது.
வரும் 8ம் தேதி அன்று தேரோட்ட தினத்தில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ லசரி சிவபிரகாசா சத்யஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா தானம் 75 ஆயிரம் பேருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொள்ள வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக