திண்டிவனத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" பிரசாரம் – மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கிய முன்னாள் அமைச்சர் மஸ்தான். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

திண்டிவனத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" பிரசாரம் – மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கிய முன்னாள் அமைச்சர் மஸ்தான்.


திண்டிவனம், ஜூலை 29:


திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், “ஓரணியில் தமிழ்நாடு” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ. மஸ்தான் நேரில் வழங்கினார். இந்த நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேதுநாதன், மாசிலாமணி, மற்றும் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாணவர்களை நேரில் சந்தித்து, அரசின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டன.


ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைத்திருந்தார். இது, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் மக்கள் மற்றும் இளைஞர்களிடம் நேரடி தொடர்பை உருவாக்கும் திட்டமாக செயல்படுகிறது. திமுக, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும் நோக்கில், இந்நிகழ்வுகள் மூலமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad