மேல்மலையனூர், ஜூலை 24 -
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசையையொட்டி நேற்று இரவு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக அதிகாலை மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்டவையுடன் சிறப்பு அபிஷேகமும், தங்கக் கவச அலங்காரத்துடன் மகாதீபாராதனையும் நடைபெற்றது.
உற்சவர் அங்காளம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் இரவு 11 மணிக்கு வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். பூசாரிகள் தாலாட்டு பாடல்களுடன் அம்மனை வாழ்த்தினர். புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக