பாட்டாளி மக்கள் கட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோரிடையே நிலவும் பனிப்போர் காரணமாக பாமக நிர்வாகிகளிடையே மாநிலம் முழுவதும் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே இராமதாஸ் பக்கம் நிற்பதா அல்லது அன்புமணி இராமதாஸ் பக்கம் நிற்பதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் பாமகவினரிடையே நாளுக்கு நாள் மனசோர்வும், விரக்தியும் ஏற்பட்டுள்ளதாக கூறபடுகிறது.
இந்த நிலையில் தங்களது எதிர்கால அரசியல் பநணங்களை தொடங்க நினைக்கும் பாமகவினர் மாற்று கட்சிக்கு செல்ல துவங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக கடலூர் பாமக வடக்கு மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் காசி.நெடுஞ்செழியன் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என 200 பேர் கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் இராஜேந்திரன் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் இரு பிரிவுகளாக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் இருப்பதால் பாமகவினர் அதிக அளவில் அதிமுக மற்றும் மாற்று கட்சிகளில் நகர துவங்கியுள்ளனர், இதனால் கடலூர் பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக