விழுப்புரம், ஜூலை 28 -
தங்கள் உரிமைகளை பெற்றுத் தரக் கோரி, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 28) பழங்குடி நரிக்குறவர் சமூகத்தினர் நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். பெரிய எண்ணிக்கையில் குழுமிய இவர்கள், அலுவலகத்துக்குள் நுழைந்து, ஊசிமணி, பாசிமணி, பலூன்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதுபோல சிறு கடைகள் அமைத்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தலைமுறை தலைமுறையாக விக்கிரவாண்டியில் வாழ்ந்து வந்தும், இன்றுவரை சாதி சான்றிதழ் மற்றும் குடிமனை பட்டா வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர்.
இந்த போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு இருந்தது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தேவையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா வழங்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். போராட்டக்காரர்கள், "நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை தெரிவித்தனர்.
செய்தியாளர்: அருள்.சி – விழுப்புரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக