திண்டிவனம், ஜூலை – 28 | ஆடி 12 -
மதுரை வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலைத் தடுத்திட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையைச் சார்ந்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம்சுமத்தி அவரை அச்சுறுத்தும் வகையில் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அவர்கள் நடந்திருப்பது குறிப்பாக, நீதிமன்றத்திலேயே பலரின் முன்னிலையில் "நீ ஒரு கோழையா" என்றும் அவர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தப் போக்கு கண்டனத்துக்குரியதாகும். உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உடனே தலையிட்டு வழ. வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே தடுத்திட வேண்டுமென கோருகிறோம். அத்துடன், நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அவர்கள் மீதான புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்திட ஆவன செய்ய வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர்: அருள்.சி விழுப்புரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக