பிரம்மதேசம் அருகே 3 வீடுகளில் நகை – பணம் திருடிய வாலிபர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஜூலை, 2025

பிரம்மதேசம் அருகே 3 வீடுகளில் நகை – பணம் திருடிய வாலிபர் கைது.


விழுப்புரம், ஜூலை.25-

பிரம்மதேசம் அருகே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வெங்கடேசன்.(வயது 42). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதைநோட்ட மிட்ட மர்மநபர் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 54 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டார்.


இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத் தியதில், பிரம்மதேசம் அடுத்த ராஜபாளையத்தை சேர்ந்த சிவசங்கர் மகன் பிரவீன் குமார் (25) என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் ராஜபாளையத்துக்கு விரைந்து சென்று பிரவீன்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், கடந்த 17-ந்தேதி ராஜபாளையத்தை மற்றும் 18-ந்தேதி அதே ஊரை சேர்ந்த கோதண்டம் (42) என்பவரது வீட்டில் உள்ளவர்கள் 100 நாள் வேலைக்கு செல்வதை நோட்ட மிட்டு வீட்டின் பூட்டுகளை உடைத்து நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது. 


மேலும் பிரவீன்கு மார் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், வீடுகளில் திருடியதாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார், பிரவீன்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 44 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் மீட்கப்பட்டது. மேலும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியேய் கைது செய்த பிரம்மதேசம் போலீசாரைய் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்.


- செய்தியாளர் : அருள்.சி, விழுப்புரம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad