காலத்தை வென்ற மேதகு APJ கலாம் ஐயாவின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ,
நீலகிரி மாவட்டம் முழுவதும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் சார்பில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மலர் தூவி , மரங்களை நடுதல், ரத்த தானங்கள் செய்தல் முதலிய சேவைகளால் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முதலாவதாக குன்னூர் பேருந்து நிலையம் பேரறிஞர் அண்ணா சிலை அருகில். அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை பொறுப்பில் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் திரு. கன்டோன்மென்ட் வினோத்குமார் தலைமையில், குன்னூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சாதிக் நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் கௌரவ தலைவர் ராமகிருஷ்ணன் கோவர்த்தனன் முன்னிலையில் நடைபெற்றது.
கூடலூர் நகரில் அப்துல் கலாம் உதவும் அறக்கட்டளை பொறுப்பில் கூடலூர், வண்டி பேட்டை அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் ராமகிருஷ்ணா முதியோர் இல்லம் நிர்வாகி திருமதி வசந்த குமாரிஅம்மா தலைமையில், கூடலூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு லாரன்ஸ் முன்னிலையில் நடைபெற்றது.
கோத்தகிரி பகுதியில் குன்னூர் ஆம்புலன்ஸ் சல்மான் பொறுப்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. கோவர்தனன் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. உதகை பகுதியில் அரசினர் கலைக் கல்லூரி அருகில் யூத் ஹாஸ்டல் வளாகத்தில் கூட்டமைப்பின் உதகை வட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் . மாவட்ட செயலாளர் திரு. கன்டோன்மென்ட் வினோத்குமார். தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் நிர்வாகி நேரு யுவகேந்திரா ரஞ்சித் முன்னிலை வகித்தார். உயிர் காற்று அறக்கட்டளை சுதாகர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் இளம் தலைமுறையினரை சேவை என்னும் பாதையில் அழைத்து செல்ல மாணவர் குழுவினை உருவாக்கி அதன் பெயர் பலகையை மாவட்ட செயலாளர் திரு வினோத் குமார் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அறக்கட்டளை தலைவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் நாட்டுப்பற்றை அடுத்த தலைமுறையினர் மனதிலும் நிலை நிறுத்தினர் என்பது அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுதலை பெரும் நிகழ்வாக அமைந்தது குறிப்பு:-ரத்த தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பெண்கள் அதிக அளவில் ரத்ததானம் வழங்கினார்கள் உதகையில் ரத்ததானம் அளித்தவர்களுக்கு கௌரவித்து வெள்ளி நாணயங்கள் வழங்கி சிறப்பித்தனர்
மாவட்ட அளவில் மாநில அளவில் சிறந்த பேச்சாளருக்கான விருத்தினை திருமிகு மாணவன் சுதிர் அவர்களுக்கும் திருமிகு மாணவ செல்வி தஸ்லிமா நஸ்ரின் அவர்களுக்கும் வாழ்வோம் ! வாழ வைப்போம்!! தன்னார்வலர்கள் நண்பர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக