தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பயனடைந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள்.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள கொல்லிமலை கிராமத்தில் முதலமைச்சரின் மகளிர் சுய உதவி குழு திட்டத்தின் கீழ் கொல்லிமலை கிராமத்தில் 12 உறுப்பினர்கள் சேர்ந்து கடந்த 10 04 2018 ஆம் ஆண்டு ஐய்யனூர் அம்மனூர் மகளிர் சுய உதவி குழு ஒன்றினை ஆரம்பித்து இதனால் வரை நல்ல முறையில் குழுவினை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தக் குழுவில் 12 உறுப்பினர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் கடந்த ஐந்து வருடங்களாக தேயிலை தோட்டத்தினை குத்தகைக்கு எடுத்து தேயிலை பறித்து வந்துள்ளார்கள். கடந்த 2019 ஆம் வருடம் இந்த திட்டத்திற்கு ரூபாய். 5,00,000 இலட்சம் மற்றும் 2023 ஆம் வருடம் ரூபாய் 10,00,000 இலட்சம் எள்ளநல்லி கூட்டுறவு வங்கியில் கடனாக பெற்று நல்ல முறையில் கடனை செலுத்தி தற்பொழுது மூன்றாம் வங்கி கடனாக கடந்த மாதம் 25 06 2025 ஆம் தேதியில் ரூபாய் 12,00,000 இலட்சம் கடனாக பெற்று தேயிலை தோட்டம் குத்தகைக்கு எடுத்து தேயிலை பறித்து வருகிறோம் என குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் அதிகமான பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் அது மட்டுமில்லாமல் அவர்கள் குழுவில் உள்ள ஐந்து நபர்கள் சேர்ந்து சத்துமாவு லட்டு, சத்துமாவு இனிப்பு பலகாரம் போன்றவற்றை தயாரித்து அருகாமையில் உள்ள கடைகளுக்கும் மற்றும் அருகாமையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் வழங்கி வருவதன் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும் கூறுகிறார்கள். இத்தகைய நன்மைகளை குழுவிற்கு ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையத்தள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக