கூடலூர் அருகே பாடந்தொரை எம் டி எஸ் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஜூலை, 2025

கூடலூர் அருகே பாடந்தொரை எம் டி எஸ் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.

 


கூடலூர் அருகே பாடந்தொரை எம் டி எஸ் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.


கூடலூர் அருகே உள்ள பரிந்துரை எம் பி எஸ் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜாசார் தலைமை தாங்கினார். 


பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மல்லிகா, ஆசிரியர்கள் ஜெயசுதா, ஷெரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் கல்வி மக்களிடம் எடுத்துச் செல்ல குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டுள்ளது. 


பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மூலம் நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நுகர்வோர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை விட நுகர்வோர்கள் ஏமாறுகிறார்கள் என்கிற நிலையே அதிகம் உள்ளது. பொருட்கள் தரம், பயன், நன்மைகள் குறித்து அறிந்து பயன்படுத்த வேண்டும். ஆடம்பர மற்றும் தேவையற்ற நுகர்வை தவிர்த்து தரமான நுகர்வு, தரமான பொருட்களை தேர்வு செய்து வாங்குதல், பொருட்களின் சேர்மங்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்து பயன்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.


ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது தரமான பொருட்கள் நாம் வாங்கும் போது செலவிடும் பணமும் விரையமகாமல் நீண்டநாள் பயன்பெற முடியும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஜங் புட் எனப்படும் விரைவு உணவுகளை தவிர்த்து உடலுக்கு நன்மைதரும் உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில் நுகர்வோர் மன்ற மாணவர்கள் 100க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.‌‌..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad