முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற பொழுது லாரியில் பக்கவாட்டில் விழுந்து தலை சிதறி பேக்கரி ஊழியர் பலியான சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற பொழுது லாரியில் பக்கவாட்டில் விழுந்து தலை சிதறி பேக்கரி ஊழியர் பலியான சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..


கடலூர் மாவட்டம்,  வடலூர் அருகே முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற பொழுது லாரியில் பக்கவாட்டில் விழுந்து தலை சிதறி பேக்கரி ஊழியர் பலியான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, வடலூர் அருகே உள்ள ரோட்டு மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பேக்கரி மாஸ்டராக வேலை செய்து வருவதாக கூறபடுகிறது.


இந்த நிலையில் தேவேந்திரன் பேக்கரி வேலை முடித்து மதிய உணவு சாப்பிடுவதற்க்காக தனது வீட்டிற்கு தனது ஸ்கூட்டரில் சென்றிருக்கிறார். அப்பொழுது வடலூர் அய்யன் ஏரி அருகே வடலூர் நோக்கி தேவேந்திரனும் அதே சாலையில் தம்பிபேட்டை கிராமத்தில் இருந்து தேசிய சாலை விரிவாக்க பணிக்காக மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி அதிவேகமாக வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது பொது முன்னால் சென்ற மற்றொரு பைக் மீது மோதாமல் இருக்க தேவேந்திரன் விலகி செல்ல முயன்ற போது லாரியில் பக்கவாட்டில் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடலூர் போலிசார் தலை நசுங்கி உயிரிழந்த தேவேந்திரனின் உடலை கைபற்றி  பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் லாரியினை போலிசார் மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad