திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கருங்குழி ,வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார் முன்னதாக கருங்குழி கிராமத்தில் மக்களை நேரடியாக சென்று  சந்தித்த அமைச்சர் அங்கு கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து அதில் வரும் ஓடிபி மூலம் நீ திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தினார்.


தொடர்ந்து வடலூர் ராகவேந்திரா சிட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை தொடக்கி வைத்தார்  தொடர்ந்து அவர் பேசுகையில் கழக நிர்வாகிகள் அனைவரும் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் தற்பொழுது ஓரணியில் இணைவோம் என்ற திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு திமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளை விளக்கமாக எடுத்துக் கூறி அதில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என பேசினார
 

நிகழ்வில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் துணைத் தலைவர் சுப்பராயலு நகரச் செயலாளர் தன. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad