குமராட்சி காவல் நிலைய சரகம் வெள்ளூர் கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரம் இளங்கமூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவர் அவரது நண்பர்களுடன் இயற்கை உபாதைக் கழிக்க சென்றபோது கடந்த ஒரு வாரத்ற்க்கு முன்பு மோட்டார் சைக்கிள் வேகமாக ஓட்டி சென்றது சம்பந்தமாக இரு தரப்பு சிறுவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர் மற்றும் இளைஞர்கள் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
இதன்காரணமாக புகர்தாரரை சாதிப் பெயரை இழிவுபடுத்தி திட்டியது சம்பந்தமாக குமராட்சி காவல் நிலையத்தில் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம் சிறார்கள் மற்றும் 3 நபர்கள் மீது வன்கொடுமை பிரிவு உட்பட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு
சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜி குமார் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி என மதன் என்ற தர்மராஜ் வயது 19 தந்தை பெயர்தென்னரசு கைது செய்து மற்றும் 15 வயது சட்டத்திற்கு முரண்பட்ட இளம் சிறாரை கையகப்படுத்தியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
மேலும் வெள்ளூர் கிராமம் 17 வயது சிறுவனை இளம் சிறார் மற்றும் இளைஞர்கள் தாக்கியது சம்பந்தமாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதில் முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் வயது 31 தந்தை பெயர் சேட்டு என்பவரை கைது செய்தும் மற்றும் 16 வயது சட்டத்திற்கு முரண்பட்ட இளம் சிறாரை கையக படுத்தியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் வேகமாக ஓட்டி சென்றது சம்பந்தமாக இரு தரப்பு சிறுவர்கள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக 11-07-25 தேதி இருதரப்பு இளைஞர்கள் சந்தித்தபோது வாக்குவாதம் முற்றியபோது மதன் என்பதற்கு சொந்தமான டிராக்டரில் ரோட்டார் பொருத்தி வயலில் புழுதி அடித்து விட்டு அவ்வழியாக வந்தபோது செல்வகுமார் என்பவர் எதிர் தரப்பு இளைஞர்களை பயமுறுத்துவதற்காக டாக்டரை வேகமாக ஓட்டி சென்று நிறுத்தி உள்ளார் எனவும் மேலும் கடந்த ஒரு வார காலமாக ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் ஆற்றின் மணல் எடுக்க வாய்ப்பு எதுவும் இல்லை என விசாரணையில் தெரிய வருகிறது
இந்நிலையில் சமூக ஊடகம் மற்றும் சில ஊடகங்களில் மணல் கடத்தலை தடுக்க சென்ற இளைஞர் மீது டிராக்டர் ஓட்டி வந்து ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த வந்த செய்தி உண்மை அல்ல என விசாரணையில் தெரிய வருகிறது
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு செய்தியாளர்
P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக