சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதை பொருள் ஒழிப்புக்குழுவின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதை பொருள் ஒழிப்புக் குழுவின் சார்பாக இன்று கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை கருத்தரங்கக் கூடத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) முனைவர் நிலோபர்பேகம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். காரைக்குடி சட்ட வட்டப் பணிகள் ஆணைய வழக்கறிஞர் ராதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கிக் கூறினார். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி சௌந்தர்யா நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக