திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு நீதிமன்றம் தடை - சுங்கச்சாவடி நிர்வாகம் பொது மக்களுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்க, இன்று ஒரு நாள் அரசு பேருந்து ஓட்டுநர்களிடம் கையொப்பமிட்டு சுங்கச்சாவடி வழியாக வண்டியை அனுப்பி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக அரசு பேருந்துகள் சென்று வருவதற்கான சுங்கவரி பல மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்த நிலையில், சுங்கச்சாவடி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், நீதிமன்றம் இன்று முதல் அரசு பேருந்துகளை சுங்கச்சாவடி வழியாக இயக்க தடை விதித்தது.
இந்த நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் இன்று ஒரு நாள் அரசு பேருந்து ஓட்டுநர்களிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு பொதுமக்களுக்கு பங்கம் ஏற்படாதவாறு பேருந்துகளை சுங்கச்சாவடி வழியாக அனுப்பி வருகிறது. அந்த கடிதத்தில் அரசு பேருந்தில் சுங்கவரி செலுத்தாமல் உள்ளதை நான் அறிவேன், நான் இந்த வழித்தடத்தில் இருந்து உரிய இடத்திற்கு இந்த பேருந்துகளை இயக்கி வருகிறேன். வரி செலுத்தாமையை நான் அறிந்து கொண்டு தான் தற்போது சென்று வருவதாகவும் அந்த கடிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் கையொப்பமிட்டு சுங்கச்சாவடி வழியாக அரசு பேருந்துகள் கடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக