குண்டும் குழியுமாய் இருக்கும் சாலையினால் நொந்து போன பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்ப்பட்ட எமரால்டு வேலி அரசு பேருந்து பயணிகளை ஏற்ற உதகையிலுருந்து எமரால்டு வேலி செல்லும் போது சுருக்கி பாலம் அருகில் சாலையில் உள்ள குழிகளால் மற்றும் மிக மிக மோசமான சாலையின் காரணத்தால் பேருந்தின் கட் உடைந்து பழுதானது இதனால் பேருந்தில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் ,முதியோர் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிக நீண்ட தூரம் நடந்து செல்லும் சூழல் உருவானது எனவே எமரால்டு முதல் எமரால்டு வேலி வரை மிக மிக மோசமாக உள்ளது. பவர் ஹவுஸ் 6, எமரால்டு வேலி, கொத்தேரி, ரெடில், இந்திரா நகர், அண்ணா நகர் ஜங்ஷன், அண்ணா நகர், சுருக்கி பாலம் ஒற்றை வீடு, சந்தியா நகர், EB கேம்ப், எமரால்டு, பகுதி மக்கள் என ஆயிர கணக்கான பொதுமக்கள் பாதிக்க படுகின்றனர் மேலும் கூட்டு குடிநீர் திட்டம், தமிழ்நாடு மின்சார உற்பத்தி செய்யும் பவர் ஹவுஸ் செல்லும் சாலை இந்த சாலையாக உள்ளது மக்களின் அத்தியாவசியமான குடிநீர் மற்றும் மின்சாரம் இப்பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கும் செல்கிறது. எண்ணற்ற வாகனங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இந்த பேருந்து இல்லையெனில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
1. நோயாளிகளை குறித்த நேரத்திற்கு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வது கடினம்
2. தினமும் பள்ளி குழந்தைகள் கல்வி பயில செல்வது கடினம்
3. முதியோர் மற்றும் கற்பினி பெண்கள் வாகனங்களில் பயணம் செய்வது மிகவும் கடினம்
4. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும், வேலைகள் அனைத்தும் பாதிக்கப்படும்
5. மிக மிக முக்கியமான நாட்டின் முதுகெலும்பான விவசாய பொருட்களே எடுத்து வருவதும் கொண்டு செல்வது மிக மிக கடினம் கடினம் என ஊர் பொதுமக்கள் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக