தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் 32 ஆம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த ஜூலை 22ம் தேதி நெல்லித்துறை கிராம மக்களின் பூச்சாற்றுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகமும், பல்வேறு அலங்கார பூஜைகளும் நடைபெற்றன இதனை தொடர்ந்து இன்று சிம்ம உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர் கவுண்டர் திருநாவுக்கரசு தலைமையில் தேக்கம்பட்டியில் இருந்து மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது சிம்ம உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏந்தியவாறு திருக்கோயிலை வலம் வந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அதனை தொடர்ந்து சிம்மம் உருவம் பொறிக்கப்பட்ட கொடி கொடி மரத்தின் ஏற்றப்பட்டு கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வரும் ஜூலை 29ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக