மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆற்றின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை!
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரை வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆற்றின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக