திருமங்கலம் அருகே ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஜூலை, 2025

திருமங்கலம் அருகே ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம்

 


திருமங்கலம் அருகே ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது.




திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 50 ஆயிரம் வளையங்களுடன் கோவில் சிலை அலங்காரம் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைமுன்னிட்டு மதுரை விருதுநகர் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த வளையல் திருவிழாவில் கலந்து கொண்டனர். வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி திருக்கோவில் எவ்வாறு பிரசித்தி பெற்றதோ அதேபோல் இந்த கிராமங்களில் இருந்து வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வது முக்கிய நிகழ்வு. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் வளையல்களை பிரசாதமாக பெற்று சென்றனர். அத்துடன் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் வளைகாப்பு சாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் செய்திருந்தனர். இந்த விழாவில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad