கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சின்ன நற்குணம் கிராமத்தில் தங்கவேல் மகன் சீனிவாசன் (60) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது இறந்த உடலை மயானத்திற்குக் கொண்டுசென்று நல்லடக்கம் செய்ய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடுகளை செய்தனர். இந்நிலையில் இறந்தவரின் வீட்டுக்கு எதிராக செல்லும் பட்டா இடத்தின் பாதையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடத்தின் உரிமையாளர்களின் ஒப்புதலின் பேரில்
இறந்தவர் உடலை சுமந்துசெல்லும் பாதையாக பயன்படுத்தி வந்தனர். திடீரென இந்தப் பாதை வழியாக செல்வதை சிலர் தடுத்தனர். இதனால் இறந்தவர் உடலை இடுகாட்டிற்கு கொண்டுசெல்ல முடியாமல் குடியிருப்பு வாசிகள் சிரமமும் வேதனையும் அடைந்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பாதையை தடுத்த நபர்களிடம் சென்று பேச்சுவார்த்தை செய்து 10 மணி நேரத்திற்குப் பிறகு தற்காலிகமாக செல்வதற்கு சம்மதிக்க வைத்த நிலையில், இந்தப் பாதையை நிரந்தரமாக பொதுப்பாதையாக தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக