கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர்AM. மகாராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வணிகர் நல வாரிய நிர்வாகக்குழு உறுப்பினரும்,கடலூர் மண்டலத் தலைவருமானD.சண்முகம் கலந்து கொண்டார். சேத்தியாத்தோப்பில் உள்ள அனைத்து வியாபாரிகளும் இந்த நல வாரியத்தின் உறுப்பினராக சேர்ந்து அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் உறுப்பினராக சேருபவர்களுக்கு உறுப்பினர் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
Post Top Ad
சனி, 5 ஜூலை, 2025
சேத்தியாத்தோப்பில்வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக