ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரி மானியம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தர்ணா போராட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரி மானியம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தர்ணா போராட்டம்


 ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரி மானியம் கிராமத்தில் மாரியம்மன் கோவில்  கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என  ஒரு தரப்பினர் எதிர்ப்பு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தர்ணா போராட்டம்


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்கிரி மானியம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என்பதை பத்திரிகைகள் அச்சடித்து அனைத்தும் ஊரார் மற்றும் சொந்தங்களுக்கு கொடுக்கப்பட்டன இந்நிலையில் அதே ஊரில் ஒரு தரப்பினர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு தரப்பினரும் அழைத்து வட்டாட்சியர் இளஞ்செழியன் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் வீரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று ஊங கிராம பொதுமக்கள் நாட்டாமைகள் என ஒன்று கூடி மாரியம்மன் கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் கட்சி பிரமுகர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஒரு தரப்பினர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் நேரடி ஆய்வு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமாறு வலியுறுத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad