கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி மேல தெருவில் வசிக்கும் இராஜாமணி அம்மாள் மூதாட்டி வயது என்பது இவர் முதியோர் உதவித் தொகை பெற்று வந்த நிலையில் திடீரென்று நின்ற முதியோர் உதவித் தொகை ஒரு வருடத்திற்கு மேல் வராமல் உள்ளது
இதற்கு ஏன் வரவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு அந்த மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறியுள்ளனர் இதணையடுத்து கிராம பொதுமக்கள் தமிழக குரல் செய்தியாளருக்கு தகவல் அளித்தனர் அதன்படி நேரில் வந்து மூதாட்டி இடம் செய்தி சேகரித்து 6-01-2025 செய்தி வெளியிடப்பட்டது மீண்டும் மீண்டும் வலுயுறுத்தும் தமிழக குரல் ஊடகம் இதன் காரணமாக அதிகாரிகள் உடனடியாக அந்த மூதாட்டிக்கு உயிர் கொடுத்து விட்டோம் என்று கூறியுள்ளனர்
எமன் போன்று உயிரை எடுத்தும் பிரம்மா போன்று மீண்டும் உயிர் கொடுத்த காட்டுமன்னார்கோயில் அதிகாரிகள் செயல் பாராட்ட தக்கது தான் தற்போது இதுவரை மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை வராமல் நிறுத்தப்பட்டு மூத்தவர் அடிப்படையில் வரிசையில் உள்ளது என்ன நியாழம் தவறு செய்தது அதிகாரிகள் தண்டனை மூதாட்டிக்கா அதற்குள் அந்த மூதாட்டியே 80 வயது கடந்த நிலையில் இறந்து விடும் அபாயம் உள்ளது
எப்போது கிடைக்கும் முதியோர் உதவித் தொகை மற்றும் நியாயவிலை கடை பொருட்கள்
மேலும் எந்த ஒரு ஆதரவு இன்றி தனி நபராக வசித்து வரும் இராஜாமணி அம்மாள் குடும்ப அட்டையும் வாங்கிய அதிகாரிகள் அவருக்கு நியாயவிலைக் கடையில் எந்த சலுகையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது உடனடியாக அவருக்கு முதியோர் உதவித் தொகையும் குடும்ப அட்டையும் வழங்கி நியாய விலை கடையில் சலுகையில் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறி உள்ளனர் இவர் பக்கம் திரும்பி பார்க்குமா மாவட்ட நிர்வாகம்?
தமிழககுரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர்
P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக