கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் பள்ளி மாணவிகளுக்கு இணைய வலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் குளோரோபுளோரி தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம், பட்டதாரி ஆசிரியர் மார்கிரெட் மேரி, ஆசிரியர்கள் நிரோஷா, மேகலா, நிஷாந்த் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது தற்போது பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற்றுவருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைவது மொபைல் பயன்பாடு. இளம் வயது மாணவ மாணவிகள் பெற்றோர்களின் மொபைல் ஃபோன்களில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக கணக்குகளை வைத்துக்கொண்டு அதில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றுவது, முகம் தெரியாத யாரோ ஒருவருடன் தகவல்கள் பரிமாறுவது அதிகரித்து வருகிறது. இதுபோல பதிவேற்றும் புகைப்படங்களை சில சமூக விரோதிகளால் மார்பிங் செய்து மிரட்டுவதற்கு வழிவகுக்கிறது. இணையதள பக்கங்களில் அனுப்பும் தகவல்கள் பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பதை மாணவிகள் புரிந்து கொள்ளுதல் அவசியம். ரீல்ஸ் மோகங்கள் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. முகம் தெரியாத நபர்களுடன் முகநூல் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப்களில் புகைப்படங்கள் தகவல்கள் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இணையதளங்களில் வரும் தவறான தகவல்கள் நம்பி செல்வதால் பல்வேறு ஏமாற்றங்களையும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே இவற்றை நம்பி ஏமாற கூடாது. சிறுவர்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் 1098 என்ற உதவி எண்கள், சைபர் க்ரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் என்றார்.
ஆல் தி சில்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது மொபைல் போனில் சாதாரண விளையாட்டுகள் ஆரம்பித்து வெறும் தகவல்களை பார்ப்பது என சமூக ஊடகங்களில் மூழ்கி போவதால் இதர விஷயங்களில் ஆர்வம் காட்ட முடியாமல் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் பாதிப்பு ஏற்படும். தேவையற்ற அழைப்புகளுக்கு பதில் அளித்து தாமே சிக்கிக் கொள்ளும் சூழலை மாணவிகள் தவிர்க்க வேண்டும். இணையதள பயன்பாட்டில் தங்களின் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது சிறந்த பாதுகாப்பு என்றார்
என் ஐ ஐ டி பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் பேசும்போது மொபைல் போன் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்வதை விட புத்தகங்கள் படிப்பதில் அறிந்து கொள்வது உடலுக்கும் மனதுக்கு ஆரோக்கியம் தரும் என்றார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஆசிரியர் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக