திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஆடிப்பெருக்கு திருவிழா!
திருப்பத்தூர் , ஜுலை 17
திருப்பத்தூர் மாவட்டம் குன்றின் மீது அமைந்துள்ள ஏழுருவி திருமுருகன் ஆலயத்தில் ஆடி 1 பிறப்பு பெருவிழா! திரளான பக்தர்கள் அரோகரா பக்தி முழக்கம் எழுப்பி சாமி தரிசனம்!
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பம் ஊராட்சி ஏழுருவி ஜவ்வாது மலை அடி வாரத்தில் மயிலாடும் குன்றம் என்று அழைக்கப்படும் எழில்மிகு ஏழுருவியின் குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருமுருகன் ஆலயம் அமைந்துள்ளது.இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி 1 பிறப்பு பெருவிழா முருக பெருமானுக்கு சிறந்த வழிபாடுகள் நடத் துவது வழக்கம் இந்த நிலையில் ஆடி 1 பெருவிழாவை முன்னிட்டு இன்று முரு கருக்கு அலங்காரம் செய்து அபிஷே கங்கள் நடைபெற்றன.
இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் அழகு குத்தியும் காவடி எடுத்தும் வந்த னர்.மேலும் சுமார் 3000க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர். மேலும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வா கத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது மேலும் ஆடி 1 பெருவிழா வை முன்னிட்டு இன்று முருகனை தரிசி க்க சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக