நீட் தேர்வில் திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவர் முதலிடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற அரசு பள்ளி மாணவர் இன்று வெளியான MBBS மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 572 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அம்மாணவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் சென்று வாழ்த்து பெற்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக