வேலூர் மண்டலம் சார்பாக போக்கு வரத்து துறைய சார்பில் ஏழு குளிர்சாதன அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கம்!
வேலூர் ஜுலை 26 -
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 3 கோடியே 43 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறுவழித்தடங் களில் 7புதிய குளிர்சாதனபேருந்துகளின் சேவையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி கேயன், மக்கள் பிரதிநிதிகள், மாநகரா ட்சி கமிஷனர் ஆர்.லட்சுமணன், மாநக ராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பொது மேலாளர் (வேலூர் கோட்டம்) கணபதி, ஒன்றிய குழுதலைவர் அமுதா ஞானசேகரன், 17 வது வார்டு மா மன்ற உறுப்பினர் காஞ்சனா கிருஷ்ண மூர்த்தி, குளிர்சாதன பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போக்குவரத்து துறை அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக