பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை! மூன்று குழந்தைகளை தவிக்க விட்ட தாய்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை! மூன்று குழந்தைகளை தவிக்க விட்ட தாய்!

பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை! மூன்று குழந்தைகளை தவிக்க விட்ட தாய்!
பேரணாம்பட்டு , ஜுலை 1

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை, வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு அடுத்த மொர்சபல்லி ஊராட்சிக்கு ட்பட்ட நலங்காநல்லூர் கொல்லை மேடு கிராமத்தை சேர்ந்தவர் நேரு மேஸ்திரி கூலி தொழிலாளி இவருக்கு ரஞ்சிதா (29)என்ற மனைவியும் இவர்களுக்கு இரண்டு பென் குழந்தைகளும்  ஒரு ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.கணவன் மனைவிக்கு திடி ரென்று நேற்று குடும்ப தகராறில் பிரச்சி னைகள் ஏறபட்டு உள்ளது அதில் மனம் வேதனையடைந்த ரஞ்சிதா கணவர் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சிறிது நேரம் கழித்து கணவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி ரஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்து உள்ளார் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் கத்தி கூச்சலிட்டுள் ளார் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே பேரணாம்பட்டு காவல் நிலையத் திற்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் பேரில் விரைந்து வந்து போலிசார் இறந்த சடலத்தை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பிவைத்துள்ளனர் மேலும் இதுகுறித்து பேரணாம்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad