திண்டுக்கல்லில் மருத்துவ தினம்!
ஜூலை - 1 தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் வீரமணி உள்ளிட்ட மருத்துவர்களுக்கும், சமீபத்தில் சிறந்த அறுவை சிகிச்சை மூலம் 13 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்வில் சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி, நகர செயலாளர் அரபு முகமது, ஒன்றிய செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அழகர்ராஜா, முகேஷ் மற்றும் ஜேம்ஸ், அமானுல்லா கான், விஷ்ணுவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக