வடலூரில் மின் கசிவு ஏற்பட்டு இரண்டு கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதம்
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு இரண்டு கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
வடலூர் ஆர். சி. அந்தோனியார் தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் இவரின் வீட்டு அருகே உள்ள தென்னை மரத்தில் உயர் அழுத்த மின்கம்பி இதிலிருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தென்னை மரத்தில் பற்றிய தீ அருகே இருந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் கூரை வீட்டில் பற்றிக் கொண்டது இதனை தொடர்ந்து மல மல வென பற்றிய தீ ஆரோக்கியதாஸ் வீட்டு அருகே வசிக்கும் பிச்சை பிள்ளை என்பவரின் கூரை வீடும் தொடர்ந்து தீப்பற்றி எரிய தொடங்கியது இதுகுறித்து குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமானது
உயரெழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு கூறைவீடுகள் எரிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக