கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஜூலை, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது 


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள்(ஜூலை 15) கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி அகரம் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்றது.


 ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்கேஜி மற்றும் யூகேஜி மாணவர்கள் அழகிய வீட்டினை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்தார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இயற்கையுடன் இணைந்த மலை பிரதேசத்தை வண்ணம் தீட்டினார்கள். எதிர்கால இந்தியா தலைப்பில் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி,விஞ்ஞானம், விவசாயம் உள்ளடக்கிய இந்தியாவை  ஓவியங்காளக தீட்டினார்கள்.


இந்நிகழ்ச்சியை  துணை முதல்வர் ரூபினா,ஆங்கில ஆசிரியை ஜானகி, கீர்த்தனா மற்றும் மோனிஷா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர்  GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad