தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் -மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!!!!
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 2026 சட்டசபை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி உள்ளார் .மாலை மேட்டுப்பாளையத்தில் ஈரோடு ஷோ நடந்தது. தொடர்ந்து தேர்தல் பிரச்சார சொகுசு பஸ்ஸில் தமது பிரச்சாரத்தை தொடங்கினார்.திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என தெரிவித்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ,மத்திய அமைச்சர் எஸ் முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக