அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம்


திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில்   ஆலோசனை கூட்டம்  அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது பல்லடம்   கே. அய்யம்பாளையத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் உறுப்பினர்கள் பேரணியாக சென்று துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 53 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதையொட்டி  அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்து கொண்டார் சிறப்பு அழைப்பாளராக முகவை கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அதில் நமக்குள் போட்டி பொறாமை எண்ணங்கள்  அறவே தவிர்க்க வேண்டும் எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும் ஊக்கத்தோடு ஒன்றுபட்டு வாழ வேண்டும் எனவும் தலைவர் உடனான பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார் மேலும் சங்க நிறுவன தலைவர் ஜி கே விவசாயமணி ( எ) ஜி சுப்பிரமணியம்  அவர்கள்   கராத்தே போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளை சால்வையும் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் மேலும் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் சங்க வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பல்வேறு ஆலோசனைகளை கூறினார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad