கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் தினம் கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் முகமத் ரபி தலைமை தாங்கினார். பள்ளி ஆங்கில ஆசிரியை ஜானகி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பள்ளி துணை முதல்வர் ருபினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பாண்டலம் கோவில் நகர லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர்கள் வேலு, அண்ணாமலை, முன்னாள் தலைவர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
லயன்ஸ் கிளப் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் பழனிவேல்,முதல் துணை தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மழலையர் வகுப்பாசிரியைகள் கீர்த்தனா, மோனிஷா ஆகியோர் ஏற்பாட்டில் குழந்தைகள் சிறப்பாக பாடல்களை பாடினார்கள்.
பள்ளி மாணவ , மாணவிகள் காமராஜர் பற்றிய பொன்மொழிகளை மிக அழகாக எடுத்துரைத்து பாடல் பாடி நடனமாடினார்கள்.
தனித்திறனை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் பரிசு அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை சுஷ்மிதா நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக