கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக பாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் 10, 11 ,12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மாணவிகள் தேர்ச்சிக்குத் துணை நின்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, என முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவரும் ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையருமான பாவலர் சு. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட முத்தமிழ் சங்க காப்பாளர் கோமுகி மணியன், பள்ளி தலைமை ஆசிரியை திருநிறைச்செல்லி , அரிமா சங்க மாவட்டத் தலைவர் வேலு, பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன் , பள்ளி உதவி தலைமை ஆசிரியை டயானா ,மாவட்ட முத்தமிழ்ச் சங்க துணைத் தலைவர்கள் வளர்மதிச்செல்வி, கலைமகள் காயத்ரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்வின் தொடக்கமாக கல்வித்தந்தை காமராசர் பிறந்தநாள் விழா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுக்கேடையமும் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது மாவட்ட முத்தமிழ்ச்சங்கம் சார்பாக பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கல்லை மாவட்ட முத்தமிழ் சங்க இணைச் செயலாளர் எம் ஜி ராஜா, கல்லை மாவட்ட முத்தமிழ் சங்க துணைச் செயலாளர்கள் துரை கிருஷ்ணமூர்த்தி, மணிவேல் ,அறிவுடைய நம்பி, சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர் சங்க துணைத் தலைவர் கமலநாதன், ராமசாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக