காட்பாடி அடுத்த திருமணியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம்!
காட்பாடி , ஜுலை 14 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருமணியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்குவதற்கு அதிகாரி கள் லஞ்சம் கேட்பதாகவும் - தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதால் தங்கள் பகுதி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாக மனு அளித்து தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.வேலூர் மாவட்டம், கே.வி குப்பம் தாலுகா திருமணி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் கலைஞர் கனவு இல்லா திட்டத்தில் வீடு வழங்க கோரி நான்கு முறை மனு அளித்தும் தற்போது வரை தங்களுக்கு வீடு வழங்கவில்லை எனவும். தகுதியுடையவர்களுக்கு இந்த அரசு வழங்கும் இலவச வீடு வழங்காமல் முப்பதாயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏற்கனவே பயன் பெற்றவர்களுக்கு இந்த அரசு இலவச வீட்டை வழங்கி வருகின்றனர் எனவும், மேலும் தங்கள் பகுதியில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பலமுறை மனுக்கள் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் கிராம மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டுள்ளன எனவும் இதுபோன்று தங்கள் கிராமத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சனைகளை கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்க சென்றால் கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள் பங்கு பெறக் கூடாது என அதிகாரிகள் மிரட்டுவதால் எங்கள் குறைகளை யாரிடம் சென்று தெரிவி ப்பது என்று தெரியவில்லை ஆகவே எங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனை களை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சிய ரிடம் ஊர் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக