பந்தலூர் மற்றும் உப்பட்டி பகுதியில் மாடி தோட்டம் அமைக்க உபகரணங்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

பந்தலூர் மற்றும் உப்பட்டி பகுதியில் மாடி தோட்டம் அமைக்க உபகரணங்கள்


பந்தலூர் மற்றும் உப்பட்டி பகுதியில் மாடி தோட்டம் அமைக்க உபகரணங்கள் வழங்கப்பட்டது.


ஆல் தி சில்ரன் அமைப்பு சார்பில் பந்தலூர் வட்டாரத்தில் பல இடங்களில் மக்களிடம் மாடி தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.


அதில் மாடி தோட்டம் அமைக்க ஆர்வம், விருப்பம் தெரிவித்தவர்களுக்கு அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.


பந்தலூர் கிளை நூலகம் மற்றும் உப்பட்டியில் ஆல் தி சில்ரன் சார்பில் இயற்கை முறையில் மாடி தோட்டம் அமைக்க உபகரணங்களான தேங்காய்நார் தொட்டி, தேங்காய்நார் - மரபொடி உரம், இயற்கை உரம், காய்கறி செடிகள் மற்றும் விதைகள் சேர்த்து வழங்கப்பட்டது.


நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கிளை நூலகர் நித்திய கல்யாணி, அறிவழகன் உள்ளிட்டோர் 10 பேருக்கு மாடிதோட்ட  உபகரணங்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad